எந்திரன் எரிச்சல்
சன் டிவியில் எந்திரன் இசை வெளியீடு (முதல் பகுதி) பார்த்தேன்.
இது ரஜினி படமா? சன் பிக்சர்ஸ் படமா? குழப்பமாக இருக்கிறது.
ரஜினிக்கு மரியாதை இருப்பதாகவே தெரியவில்லை. விவேக் கூட ஒப்புக்கு “சூப்ப்ர் ஸ்டார் ரஜினி” என்று சொல்லிவிட்டு “உயர்திரு மரியாதைக்குரிய பெருந்தகை சன் குழுமத்தின் சேர்மேன் மற்றும் எம்டி கலாநிதி அவர்கள்” என்கிறார். மேடைக்கு கூப்பிடும்போது கூட ரஜினிக்குப்பிறகு கலாநிதி. கைரேகை வைத்து ஏதோ ஜாலம் செய்தார்கள், அதிலும் கலாநிதி கடைசியாக. (ரஜினி ஒன்று முதலில் இருக்க வேண்டும் அல்லது கடைசியாக - அது என்ன நடுவில்)
மதுரையில் ரசிகர்கள் கொண்டாட்டம் என்றெல்லாம் காட்டுகிறார்கள் - அவர்களும் கலாநிதி புகழ் பாடிகிறார்கள்.
கலாநிதி மிகப்பெரிய மனிதர்தான். அரசியல் பலம் இல்லாவிட்டாலும் அவர் தொழிலில் வெற்றிகறமாக இருந்திருப்பார் என்றே நம்புகிறேன். ஆனால், ரஜினியை விட பெரியவரா? (in the context of thamizh movies).
ஒரே வேண்டுதல் - படம் ரிலீஸ் ஆகும் போது Nakul, Vishal போல மதுரை/தேனிக்கு கூட்டிச்சென்று ரஜினியை தியேட்டரில் ஆட விடாமல் இருக்க வேண்டும்.
இன்றைய நிகழ்ச்சியின் ட்ரைலரில் ரஜினியை பார்த்தாலே பாவமாக இருக்கிறது - இன்று தடுமாறி அவர் பேசுவதை பார்க்கப்போவதில்லை!
Inception பார்க்கப்போகிறேன்.